இயற்கையின் படைப்பு

மனிதனை இயற்கை படைத்தது மகத்தான சாதனைகள் படைக்கத்தான்!
மண்ணுக்கு இரையாக அன்று!
மண்ணை இயற்கை படைத்தது மனிதர் வாழ்ந்து மகிழத்தான்!
மண்புழுவுக்கு இரையாக அன்று!
மண்புழுவை இயற்கை படைத்தது மண்ணை வளப்படுத்தத்தான்!
மீனுக்கு இரையாக அன்று!
மீனை இயற்கை படைத்தது கான் நீரை சுத்திகரிக்கத்தான்!
வான் பறவைக்கு இரையாக அன்று!
வான் பறவையை இயற்கை படைத்தது வாழ்க்கை பாடம் சொல்லிக்கொடுக்கத்தான்!
கான் விலங்குக்கு இரையாக அன்று!
கான் விலங்கை இயற்கை படைத்தது கானை வளப்படுத்தத்தான்!
மனிதனுக்கு இரையாக அன்று!
மனிதனை இயற்கை படைத்தது மகத்தான சாதனைகள் படைக்கத்தான்!
மண்ணுக்கு இரையாக அன்று!

தமிழ்மணத்தில் இந்த இடுகையின் தற்போதைய மதிப்பீடு: . உங்கள் மதிப்பீட்டைச் சேர்க்க நட்சத்திரங்களின் மேல் சொடுக்கவும். நன்றி!

ஏன் இந்த காட்டுமிராண்டிதனம் !

கடல் அன்னையே !
நீ சீறியதேன் ?
உன் மடியில் விளையாடிய
மக்கள் மடிந்ததேன் ?
அன்னைக்கு இப்படி
கோபம் வரலாமா ?
அரவம் போல் பிள்ளைகளை
வீழுங்கலாமா ?

தமிழ்மணத்தில் இந்த இடுகையின் தற்போதைய மதிப்பீடு: . உங்கள் மதிப்பீட்டைச் சேர்க்க நட்சத்திரங்களின் மேல் சொடுக்கவும். நன்றி!

தடையில்லை !

வண்ண வண்ண மீன் பிடிக்க
வங்கக் கடல் லாயக்கில்ல !
வாடாத பூப்பறிக்க
வானமது தூரமில்ல !
எட்டிப்பிடிக்கதுக்கு
இமயமலை உயரமில்லை !
என் என்னமெல்லாம் ஈடேற
எந்தத்தடையுமில்லை !

தமிழ்மணத்தில் இந்த இடுகையின் தற்போதைய மதிப்பீடு: . உங்கள் மதிப்பீட்டைச் சேர்க்க நட்சத்திரங்களின் மேல் சொடுக்கவும். நன்றி!

உறங்க என் மடிக்கு வா !

உறங்காமல் உலவும் காற்றே
உறங்க என் மடிக்கு வா !
ஒயாமல் அலையும் அலையே
ஒய்ந்திருக்க கரைக்கு வா!
நில்லாமல் செல்லும் நிலவே
நிற்க என் இல்லம் வா!
சொல்லாமல் பொழியும் முகிலே
சுகித்திருக்க என் தலைக்கு வா !

தமிழ்மணத்தில் இந்த இடுகையின் தற்போதைய மதிப்பீடு: . உங்கள் மதிப்பீட்டைச் சேர்க்க நட்சத்திரங்களின் மேல் சொடுக்கவும். நன்றி!

இயற்கையின் காதல்

காட்டுல பூவிஞ்சிருக்கு
காம்பெல்லாம் தேன் வழிஞ்சிருக்கு
கிட்ட வந்த வண்டு அது
தொட்டுத்தேனை உறுஞ்சும்போது
பூவுக்கும் ஆசைவந்திருச்சி!
வண்டுக்கும் போதைவந்திருச்சி!

தமிழ்மணத்தில் இந்த இடுகையின் தற்போதைய மதிப்பீடு: . உங்கள் மதிப்பீட்டைச் சேர்க்க நட்சத்திரங்களின் மேல் சொடுக்கவும். நன்றி!

ஆளுக்கொரு நியாயம் !

அநியாய நாட்டில
ஆணுக்கொரு நியாயமாம் !
பொல்லாத நாட்டில
பொண்ணுக்கொரு நியாயமாம் !
நல்ல மனசுள்ள
அண்ணன் மார்களே !
நல்லா கேளுங்கண்ணே !
இந்த நியாயத்தை சொல்லுங்கண்ணே !
கெண்டமீனை புடிச்சவனுக்கு
கெழுத்திமீனுல ஆசை !
கெழுத்திமீனை புடிச்சவனுக்கு
கெண்டமீனுல ஆசை !
கண்டபடி ஆண் நடந்தா
காத்தோட போவுதுங்க !
கட்டுப் பட்டு பெண் நடந்தும்
கண்டபடி ஏசுறாங்க !

தமிழ்மணத்தில் இந்த இடுகையின் தற்போதைய மதிப்பீடு: . உங்கள் மதிப்பீட்டைச் சேர்க்க நட்சத்திரங்களின் மேல் சொடுக்கவும். நன்றி!

வசந்தப்பாட்டு

வானம் ஒரு வசந்தப்பாட்டு பாடுதே

மேகம் ஒரு இசைத்தாளம் போடுதே

அந்தரத்தில் அந்த நிலா ஆடுதே ஆடுதே

சேர்ந்தாடும் தாரகைகள் காற்சதங்கை தேயுதே

தமிழ்மணத்தில் இந்த இடுகையின் தற்போதைய மதிப்பீடு: . உங்கள் மதிப்பீட்டைச் சேர்க்க நட்சத்திரங்களின் மேல் சொடுக்கவும். நன்றி!