தடையில்லை !

வண்ண வண்ண மீன் பிடிக்க
வங்கக் கடல் லாயக்கில்ல !
வாடாத பூப்பறிக்க
வானமது தூரமில்ல !
எட்டிப்பிடிக்கதுக்கு
இமயமலை உயரமில்லை !
என் என்னமெல்லாம் ஈடேற
எந்தத்தடையுமில்லை !

தமிழ்மணத்தில் இந்த இடுகையின் தற்போதைய மதிப்பீடு: . உங்கள் மதிப்பீட்டைச் சேர்க்க நட்சத்திரங்களின் மேல் சொடுக்கவும். நன்றி!

உறங்க என் மடிக்கு வா !

உறங்காமல் உலவும் காற்றே
உறங்க என் மடிக்கு வா !
ஒயாமல் அலையும் அலையே
ஒய்ந்திருக்க கரைக்கு வா!
நில்லாமல் செல்லும் நிலவே
நிற்க என் இல்லம் வா!
சொல்லாமல் பொழியும் முகிலே
சுகித்திருக்க என் தலைக்கு வா !

தமிழ்மணத்தில் இந்த இடுகையின் தற்போதைய மதிப்பீடு: . உங்கள் மதிப்பீட்டைச் சேர்க்க நட்சத்திரங்களின் மேல் சொடுக்கவும். நன்றி!

இயற்கையின் காதல்

காட்டுல பூவிஞ்சிருக்கு
காம்பெல்லாம் தேன் வழிஞ்சிருக்கு
கிட்ட வந்த வண்டு அது
தொட்டுத்தேனை உறுஞ்சும்போது
பூவுக்கும் ஆசைவந்திருச்சி!
வண்டுக்கும் போதைவந்திருச்சி!

தமிழ்மணத்தில் இந்த இடுகையின் தற்போதைய மதிப்பீடு: . உங்கள் மதிப்பீட்டைச் சேர்க்க நட்சத்திரங்களின் மேல் சொடுக்கவும். நன்றி!

ஆளுக்கொரு நியாயம் !

அநியாய நாட்டில
ஆணுக்கொரு நியாயமாம் !
பொல்லாத நாட்டில
பொண்ணுக்கொரு நியாயமாம் !
நல்ல மனசுள்ள
அண்ணன் மார்களே !
நல்லா கேளுங்கண்ணே !
இந்த நியாயத்தை சொல்லுங்கண்ணே !
கெண்டமீனை புடிச்சவனுக்கு
கெழுத்திமீனுல ஆசை !
கெழுத்திமீனை புடிச்சவனுக்கு
கெண்டமீனுல ஆசை !
கண்டபடி ஆண் நடந்தா
காத்தோட போவுதுங்க !
கட்டுப் பட்டு பெண் நடந்தும்
கண்டபடி ஏசுறாங்க !

தமிழ்மணத்தில் இந்த இடுகையின் தற்போதைய மதிப்பீடு: . உங்கள் மதிப்பீட்டைச் சேர்க்க நட்சத்திரங்களின் மேல் சொடுக்கவும். நன்றி!

வசந்தப்பாட்டு

வானம் ஒரு வசந்தப்பாட்டு பாடுதே

மேகம் ஒரு இசைத்தாளம் போடுதே

அந்தரத்தில் அந்த நிலா ஆடுதே ஆடுதே

சேர்ந்தாடும் தாரகைகள் காற்சதங்கை தேயுதே

தமிழ்மணத்தில் இந்த இடுகையின் தற்போதைய மதிப்பீடு: . உங்கள் மதிப்பீட்டைச் சேர்க்க நட்சத்திரங்களின் மேல் சொடுக்கவும். நன்றி!

தமிழ் புத்தாண்டே வருக !

பூவிழி திறந்து வந்ததம்மா
இந்த புதிய தமிழ் ஆண்டு !

புன்னகை சிந்தி வந்ததம்மா
இந்த "பார்த்திப" தமிழ் ஆண்டு !

புலம்பிக்கொண்டே போனதம்மா
பொல்லாத் தமிழ் ஆண்டு !

இன்பம் தரவே வந்தம்மா
இந்தத் தமிழ் ஆண்டு !

இன்னல் தீர்க்கவே பிறந்ததம்மா
இந்த இனியத் தமிழ் ஆண்டு !

செந்தமிழை என்றும் செம்மொழியாக்கி சிறந்திடும்
இந்தத் தமிழ் ஆண்டு !

தமிழ்மணத்தில் இந்த இடுகையின் தற்போதைய மதிப்பீடு: . உங்கள் மதிப்பீட்டைச் சேர்க்க நட்சத்திரங்களின் மேல் சொடுக்கவும். நன்றி!

இலக்கணப்பிழை

ஆலமரத்துக்கு ஆணிவேர் இல்லையே!
அத்திப்பழங்கள் அத்தனையும் சொத்தையே!
வேப்பம்பழங்கள் விற்பனைக்கு இல்லையே!
இயற்கையின் படைப்பிலும்
இலக்கணப்பிழை இல்லாமல் இல்லையே!

தமிழ்மணத்தில் இந்த இடுகையின் தற்போதைய மதிப்பீடு: . உங்கள் மதிப்பீட்டைச் சேர்க்க நட்சத்திரங்களின் மேல் சொடுக்கவும். நன்றி!

முத்தமிழ்

முத்தமிழ் பிறந்த தெல்லம்
முதுதமிழன்னையின் வாயிலே - அவள்
முழுமகளாய் வளர்ந்ததெல்லாம்
முனி அகத்தியனின் தோளிலே - அவள்
முல்லையாய்ப்படர்ந்ததெல்லாம்
முச்சங்ககாலமே - அவள்
முப்போதும் மணப்பதெல்லாம்
முவேந்தர் ம்ண்ணிலே

- பாடலங்கம்பை (தங்கநாதன்)

தமிழ்மணத்தில் இந்த இடுகையின் தற்போதைய மதிப்பீடு: . உங்கள் மதிப்பீட்டைச் சேர்க்க நட்சத்திரங்களின் மேல் சொடுக்கவும். நன்றி!